இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தோற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று டெல்லி. பல நாட்களாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் நோயாளிகள் தவித்து வந்த நிலையில் தற்போது 10 நாட்களில் படுக்கை வசதி கொண்ட புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதில் 500 படுக்கைகளில் ஐசியூ இருப்பது குறிப்பிடத்தக்கது.