மருத்துவமனையில் பக்கவாதம் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணை படுக்கையிலேயே சீரழித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 75 வயதுள்ள வலேரி க்னேல் என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி மருத்துவமனையில் வைத்து மருத்துவமனை ஊழியர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய மரணத்திற்கான காரணம் குறித்து உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் 75 வயதுள்ள பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அந்த ஊழியர் மருத்துவமனை நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கைதுசெய்யப்பட்ட நபர் மீது பல குற்றச்சாட்டுகள் ஏற்கனவே முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த வழக்கை போலீசார் முழுமையாக விசாரித்து முடிக்காததால் நீதிமன்றம் இதை சில மாதங்கள் ஒத்திவைத்துள்ளது.