தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அரசு விழாக்களில் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசளிக்க வேண்டாம் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளராக பணியாற்றும் வரை எந்த திட்டத்தின் கீழ் அரசும் என் புத்தகங்களை வாங்கக் கூடாது. பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டு இருப்பதாக தோன்றி கலகம் விளைவிக்கும் என கூறியுள்ளார்.