Categories
தேசிய செய்திகள்

O குரூப் ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கும் வாய்ப்பு குறைவு!!

ஓ குரூப் ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில்  ஓ பிரிவு கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கும் வாய்ப்பு   குறைவு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்டது அமெரிக்காவின் பயோ டெக்னாலஜி நிறுவனம் ஒன்று தான். மேலும் இந்த ஆய்வின் தகவலானது ஏற்கனவே வெளியாகி வைரலாகி வந்த நிலையில், மீண்டும் தற்போது இது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. ஆனால் முந்தைய நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் ஏராளமான வித்தியாசமுண்டு. தற்போது கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருப்பதால் மக்கள் இதுபோன்று பரவிவரும் தகவல்களின் மீது நம்பிக்கை வைப்பதை விட, நேரடியாக  அரசு  அறிவுறுத்தலின்படி நடந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதே நல்லது.

Categories

Tech |