தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்ட முதல்வர் ஸ்டாலின், நோய் தடுப்பு நடவடிக்கைக்காக எம்எல்ஏக்கள் அரசை நாடினால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற எந்த பாகுபாடும் இன்றி மக்கள் நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.