ராகுகாலத்தில் எலுமிச்சையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தீராத சங்கடங்கள் பல தீரும் என்பது ஐதீகம். அதைப்பற்றி இதில் பார்ப்போம்.
எலுமிச்சை தீய ஆவிகளை விரட்டுவதற்கு பயன்படுகின்றது. இதன் காரணமாகத்தான் திரிசூலம், மூர்த்திகள் ,யாககுண்டம் மற்றும் கதவின் இருபுறங்களிலும் இதை நாம் வைக்கின்றோம். கண்திருஷ்டி நீங்கி பாதுகாப்பு அளிக்க மிளகாயுடன் சேர்த்து கட்டி நம் வீட்டு முன் தொங்க விட்டிருப்போம். ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தை கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பல நன்மைகள் நடக்கும்.
அதிலும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் விளக்கேற்றினால் நோய்களால் அவதிப்படுபவர்கள் விரைவில் குணமடைவார்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பூஜை செய்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் தீரும். வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் விளக்கு ஏற்றினால் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறு சில வேண்டுதல்கள் நல்ல பலன்களை தரும். 2 எலுமிச்சை விளக்கு ஏற்றி அம்மனை மனம் உருகி நாம் வேண்டும் போது பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நம் மனதிலும் இல்லத்திலும் சந்தோஷம் கிடைக்கும்.
எப்படி ஏற்றுவது:
துர்க்கை சன்னதியில் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சாறுபிழிந்து விளக்கு போல் திருப்பி நெய் ஊற்றி அதன் பின் நூல் திரியை அதில் போட்டு சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்றவேண்டும். ஏற்றிய விளக்குகளில் ஏற்றினால் தீயது. ஒற்றை விளக்கை ஏற்றக்கூடாது. ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின் சன்னதியை மூன்று சுற்றுகள் வலம் வந்து, நமஸ்காரம் செய்து பின்னர் 20 நிமிடங்கள் கோயில் அமர்ந்து விட்டு துர்க்கை பாடல்களை பாடவேண்டும். 21வது இடம் கோயிலை விட்டு வெளியேறி விடவேண்டும் .