Categories
தேசிய செய்திகள்

சிறிய தொகையில் பெரிய லாபம்… டிஜிட்டல் மயமாக்கியுள்ள உண்டியல் சேமிப்பு திட்டம்…!!

ஜார் செயலி மூலம் நாம் சிறிய தொகையை மிச்சப்படுத்த முடியும். அதாவது வெறும் ஒரு ரூபாயில் தொடங்கி சிறிய தொகையை நீங்கள்  தங்கத்தில் முதலீடு செய்யலாம். அதை எந்த நேரத்திலும் டிஜிட்டல் தங்கத்தை விற்று உங்களது பேடிஎம் அல்லது கூகுள் மூலம் அதை எடுக்க முடியும். ஜார் செயலி டிஜிட்டல் உண்டியல் போன்றது. ஆன்லைன் பரிவர்த்தனைகளை எஸ்எம்எஸ் வழியாக கைப்பற்றி உதிரி சில்லறையை எடுத்து டிஜிட்டல் தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம்.

எடுத்துக்காட்டாக பேடிஎம் இல் 27 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஜார் செயலி அதை 30 ரூபாயாக வைத்து உங்கள் கணக்கிலிருந்து மூன்று ரூபாயை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து கொள்ளும். ஜார் செயலி நம் நாட்டில் முதல் முறையாக உண்டியல் சேமிப்பு திட்டத்தை டிஜிட்டல் மயமாகி உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி தினசரி பணத்தை சேமிக்கும் பழக்கத்தை நீங்கள் தொடங்க முடியும். இந்த செயலி உங்களது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் இலவச தங்கத்தை சம்பாதிக்கலாம். எனவே நீங்கள் உங்களது நண்பர்களுக்கும் இதை பரிந்துரை செய்யுங்கள்.

Categories

Tech |