Categories
தேசிய செய்திகள்

மாட்டுச் சாணம், கோமியம் கொரோனாவை குணமாக்குமா…? அதிர்ந்த இந்திய மருத்துவ சங்கம்…!!

மாட்டுச் சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கு அறிவியல் பூர்வமான எந்த ஆதாரங்களும் இல்லை என்று மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பலரும் உயிரிழந்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தில் மக்கள் கடந்த சில நாட்களாக வாரம் ஒரு முறை மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு பிரார்த்தனை செய்வதால் நம்மை எந்த நோயும் அண்டாது என அவர்கள் நம்பி இதுபோன்ற காரியங்களை செய்து வருகின்றன. அது சம்பந்தப்பட்ட புகைப்படமும் வெளியாகி பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேச மாநில எம்பி சுரேந்திர சிங் கோமியத்தை தண்ணீரில் கலந்து குடித்தால்தான் தன்னைக் கொரோனா தாக்கவில்லை என்று அவர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதேபோல கடந்த ஆண்டு மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கொரோனாவில் இருந்து தப்பிக்க அனைவரும் கோமியம் குடியுங்கள் என்றும் கூறியிருந்தார். இவற்றை பின்பற்றுவதற்கு வடமாநிலங்களில் ஒரு மிகப்பெரிய கூட்டமே உள்ளது. ஆனால் மாட்டுச் சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு செய்வதால் வேறு நோய்களும் உருவாகும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |