மறைமுக தேங்காய் ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடந்துள்ளது. இந்த ஏலத்தை விற்பனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார். இதில் 60688 தேங்காய்களை 19 குவியல்களாக குவித்து விவசாயிகள் வைத்திருந்தனர். மேலும் இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு தேங்காயின் விலையை குறைந்தபட்ச விலையாக 7.50க்கும் அதிகபட்ச விலையாக 10.50க்கும் சராசரியாக ரூபாய் 9.14க்கும் ஏலம் எடுத்துள்ளனர். அதற்கான பணம் உடனடியாக பெற்று விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 5.5 லட்சம் தேங்காய்கள் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.