Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தில் நடிக்கும்போது கர்ப்பமாக இருந்தேன்…. பிரபல நடிகை பகிர்ந்த அனுபவம்…!!!

விஜய் படத்தில் நடிக்கும்போது தான் கர்ப்பமாக இருந்ததாக பிரபல நடிகை மாளவிகா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான உன்னை தேடிதேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இதைத்தொடர்ந்து ரோஜாவனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், சந்திரமுகி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து வந்த மாளவிகா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தார். மேலும் அவர் வாள மீனுக்கு எனும் பிரபல பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் மேனன் என்பவரை நடிகை மாளவிகா கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை மாளவிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, நான் விஜய்யின் குருவி படத்தில் ‘டண்டானா டர்னா’ பாடலுக்கு நடனமாடி இருப்பேன். ஆனால் அப்போது நான் இரண்டு மாத கர்ப்பமாக இருந்தேன். அதனால் அப்பாடலில் எனக்கு சுமாரான ஸ்டெப்புகள் மட்டும்தான் இருக்கும். ஒருவேளை நான் கர்ப்பமாக இல்லாதிருந்தால் எனது இந்த கடைசி படத்தில் எனது முழு நடன திறமையை வெளிப்படுத்தி இருப்பேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |