அரசின் வேண்டுகோள் படி ஒரு நாளைக்கு 150 டன் ஆக்சிஜன் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து தொழிற்சாலைகளிலும் தடையின்றி ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகின்றதா என கண்காணிக்கும் விதத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அந்த சமயம் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட சூப்பிரண்டு சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி போன்றோர் உடனிருந்தனர்.
இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுவதால் உரிய நேரத்தில் எவ்வித தடையுமின்றி வினியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அரசின் வேண்டுகோளின் படி ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஆக்சிஜன் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு கூடுதலாக 120 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பணியானது துவங்கியுள்ளது. மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை 20 மெட்ரிக்டன்னாக அதிகரித்து கூடுதலாக நாளொன்றுக்கு 150 டன் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.