பெண்கள் அனைவரும் சேர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வேலை இழந்து வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த காரணத்தினால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க கோரி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.