Categories
உலக செய்திகள்

குண்டூசிகள் பதிக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள்…. நாய்கள் வைத்திருப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…. எச்சரிக்கை விடுத்த மக்கள் குழு….!!

பிரிட்டனில் குண்டூசிகள் பதிக்கப்பட்டு ரொட்டிகள் போடப்பட்டுள்ளதால் நாய்கள் வைத்திருப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் Nottinghamshireu என்ற பகுதியில் உள்ள பூங்காவுக்கு ஒருவர் தனது நாயை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனிடையே பூங்காவில் சில ரொட்டித் துண்டுகள் கிடப்பதை  கண்ட அவரது நாய்  அதனை சாப்பிட சென்றுள்ளது. அப்போது திடீரென ரொட்டியை கவனித்த அவர் அதில் குண்டூசிகள் இருந்ததை பார்த்து தனது நாயை சாப்பிட விடாமல் தடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த கொடூரமான செயலை செய்தவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குழு இந்த செய்தியை ட்விட்டரில் பதிவிட்டு நாய்கள் வைத்திருப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |