சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பீர்க்கலைக்காடு பகுதியில் வசித்து வரும் கருப்பையா என்பவரது மனைவி சுமதி ( 57 ) சம்பத்தன்று தனது மகன் மற்றும் கணவருடன் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னதாக உள் வாசல் கதவை காற்று வாங்குவதற்காக திறந்து வைத்துள்ளார் . இதையடுத்து மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு 1 மணி அளவில் பூமதி வீட்டிற்குள் புகுந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை கழற்றியுள்ளார்.
அப்போது திடுக்கிட்டு எழுந்த பூமதி அலற, அந்த மர்ம நபர் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும் இதுகுறித்து பூமதி சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.