Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தாயின் விபரீத முடிவு… குழந்தைகளுக்கு நடந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தாய் தனது இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள பரும்பு வேம்படி பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மூன்றரை வயதுடைய கலைமதி, அன்னலட்சுமி, என்ற இரட்டைக் பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் பார்வதியின் அண்ணனின் மனைவிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.  அதனால் பார்வதி தனது கணவரிடம் மருத்துவமனைக்குச் சென்று தனது அண்ணன் மகளை பார்த்து வருவதாக கூறியுள்ளார். அதற்கு கண்ணன் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின் கண்ணன் கை, கால்களை கழுவுவதற்காக வீட்டின் பின்புறம் சென்று விட்டார்.

இந்நிலையில் கோபமடைந்த பார்வதி திடீரென வீட்டுக்குள் சென்று தன் மீதும் தனது குழந்தைகளின் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் குழந்தைகள் வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டுள்ளனர். இந்த அலறல் சத்தத்தை கேட்ட கண்ணன் உடனடியாக விரைந்து சென்று குழந்தைகளின் மீது தீப்பற்றி எரிவதை கண்டுஅதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தண்ணீரை எடுத்து குழந்தைகளின் மீது ஊற்றி தீயை அணைத்துள்ளார்.

அதன்பிறகு தனது மனைவியான பார்வதியை பார்க்கச் சென்றபோது அவர் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த குழந்தைகளை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல்  இரண்டு குழந்தைகளும் இன்று காலையில் பரிதாபமாக உயிர் இழந்து விட்டனர். இது குறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னிவலவன், இன்ஸ்பெக்டர் அங்கையற்கன்னி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மருத்துவமனைக்குச் நேரில் சென்று உயிரிழந்த 2 குழந்தைகளின் உடல்களை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |