Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி …. நடப்பது சந்தேகம் தான் …. நவோமி ஒசாகா பேச்சு …!!!

தற்போதுள்ள சூழலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது , திட்டமிட்டபடி நடைபெறுவது  சந்தேகம்தான் , என்று டென்னிஸ் வீராங்கனையான  நவோமி ஒசாகா கூறியுள்ளார்.

உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது, கடந்த ஆண்டு உலக நாடுகளில் கொரோனா  தொற்று  பரவல் காரணமாக,  ஒத்திவைக்கப்பட்டது.இதனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த  திட்டமிட்டுள்ளது. எனவே போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 200 நாடுகளிலிருந்து சுமார் 10 ஆயிரத்துக்கு  மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தற்போது உலக நாடுகள் முழுவதும், கொரோன வைரஸின்  2 ம் அலை வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து  டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான நவோமி ஒசாகா நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது, தற்போது கொரோனா வைரஸ் பரவல் அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி வருவதால் திட்டமிட்டபடி ,போட்டி நடைபெறுவது சந்தேகம்தான் என்று கூறியுள்ளார். அத்துடன் போட்டி  திட்டமிட்டபடி நடைபெறுமா, என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது என்று கூறினார் . அதோடு ஒரு விளையாட்டு வீராங்கனையாக, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதே விருப்பமாகும். ஆனால் தற்போது கொரோனா  வைரஸ் பரவல் வேகமாக பரவி வருவதால், இந்நிலையில் போட்டி நடத்துவது பாதுகாப்பானதாக இல்லை, என்று தோன்றினால் ஒலிம்பிக் போட்டி நடப்பது சிக்கல்தான், என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |