Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்திற்கு இதான் காரணமா…? எரிந்து நாசமான ஐ.டி கம்பெனி… சென்னையில் பரபரப்பு…!!

தனியார் ஐடி கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் எல்டோரடோ அடுக்குமாடி கட்டிடம் ஓன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 6வது மாடியில் ஒரு தனியார் ஐ.டி கம்பெனி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திடீரென இந்த கம்பெனியில் அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்கை லிப்ட் வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து 6-வது மாடியில் எரிந்த தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து விட்டனர்.

ஆனால் இந்த தீ விபத்தில் அந்த கம்பெனியில் இருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த கம்பெனியில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |