பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ஷபானாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் பரவியது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடித்துவரும் ஆர்யன் என்பவரை தான் நடிகை ஷபானா காதலித்து வருவதாக கூறப்பட்டது. இதுவரை இவர்கள் இருவரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் ஆர்யனிடம் ரசிகை ஒருவர் ‘நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா?’ என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஆர்யன் ‘ஷபானா… இவங்களுக்கு என்ன சொல்லட்டும்?’ என பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆர்யனும், ஷபானாவும் காதலிப்பது உண்மைதானா ? என கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் இதுகுறித்து அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.