Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அனுமதி கொடுங்க… மருந்து வாங்க அலைமோதிய கூட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

ரெம்டெசிவிர் மருந்து வாங்கும் இடத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  

திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இயன்முறை மருத்துவ சிகிச்சை கல்லுரியில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகித்து வருகிறனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால் தான் அவர்களது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மருந்தை வாங்குவதற்கு ஏராளமானோர் வருகின்றனர். இதனை அடுத்து அவர்களிடம் உள்ள மருத்துவர் பரிந்துரை சீட்டு, அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் போன்றவற்றை சோதனை செய்த பின்பு அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டது.

இதனை அடுத்து அங்கு சிலர் தங்களது உறவினர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர் என கூறி  மாத்திரைகள் வாங்குவதற்கு உள்ளே அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் அழுது புலம்பியுள்ளனர். ஆனாலும் அவர்களை அனுமதிக்காததால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையை வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் ஆர்.டி.ஓ விஸ்வநாதன் மற்றும் தாசில்தார் ரமேஷ் போன்றோர் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

Categories

Tech |