Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கிய ஊழியர்…. பதற்றம் அடைந்த பொதுமக்கள்…. திருப்பத்தூரில் நடந்த சோகம்….!!

ஜோலார்பேட்டை அருகில் ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிரஞ்சன் என்ற மகனும் ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் வாசுதேவன் ரேஷன் கடை ஊழியராக வேலைப்பார்த்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் அவருடைய பணியில் இருந்து  ஓய்வு பெற்றுள்ளார். இதனையடுத்து மண்டலவாடி பகுதியில் ரேஷன் கடை ஊழியர் இல்லாததால் வாசுதேவன் ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஒரு வருடமாக அங்கு வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாசுதேவன் மண்டலவாடி ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு அரிசி வழங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து விட்டார்.

அதன்பின் அவரை பொதுமக்கள் மீட்டு அருகில் இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்துள்ளனர். இதனையடுத்து வாசுதேவனை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், வாசுதேவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு ரேஷன் கடை ஊழியர் வாசுதேவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |