Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. சரிந்து விழுந்த எந்திரம்…. கண்ணீரில் குடும்பம்….!!

காகித ஆலையில் எந்திரம் சரிந்து விழுந்ததில் டிரைவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் கிராமத்தில் கிரேஸ் பகுதியில் அஜித்குமார்-சத்யா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு பிறந்து 24 நாட்கள் ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அஜித்குமார் அப்பகுதியிலுள்ள காகித ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக அஜித்குமார் மீது ஒரு எந்திரம் சரிந்து கீழே விழுந்துள்ளது. இதில் அஜித் குமார் பலத்த காயம் அடைந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காகித ஆலைக்குள் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |