Categories
விளையாட்டு

கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதி திரட்ட …. நடத்தப்படும் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்பு ….!!!

கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஆன்லைன் மூலமாக  செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது .

கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக அகில இந்திய செஸ் சம்மேளனம்   சார்பாக,  ஆன்லைன் மூலம் செஸ் போட்டிகளை நடத்தி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியானது நாளை(வியாழக்கிழமை ) நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் போட்டியில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொள்கிறார். அவரோடு இந்த போட்டியில் , கிராண்ட்மாஸ்டர்களான கோனேரு ஹம்பி, ஹரிகா, நிஹல் சரின், பிரக்ஞானந்தா ஆகியோர் இந்த போட்டியில், பங்கு பெற்று  மற்ற வீரர், வீராங்கனைகள் உடன் விளையாட உள்ளனர்.

இந்தப்போட்டியில் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்துடன், விளையாட விரும்புபவர்கள் ரூபாய் 11 ஆயிரமும் , மற்ற 4 கிராண்ட்மாஸ்டர்களுடன் விளையாட விருப்பமுள்ளவர்கள் ரூபாய் 1,800 வரை கட்டணமாக செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். எனவே இந்தப் போட்டியின் மூலமாக கிடைக்கும் தொகையை , இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலமாக கொரோனா தொற்று நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர் . எனவே இந்த செஸ் போட்டியை  செஸ் காம் ,என்ற இணையதளத்தின் மூலமாக நேரலையில் காணவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடு நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் ,இதன்மூலம் கொடுக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |