Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் குண்டான தோற்றத்திற்கு மாறிய அனுஷ்கா… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை அனுஷ்கா மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை அனுஷ்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் நிசப்தம் திரைப்படம் வெளியாகியிருந்தது . மேலும் அவ்வப்போது நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சமீபத்தில் நடிகை அனுஷ்கா தன்னைவிட வயதில் இளமையான தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது .

அனுஷ்கா

கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் எடை கூடி குண்டாக இருந்த அனுஷ்கா பின் உடல் எடையை குறைத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் நடிகை அனுஷ்கா மீண்டும் குண்டான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Categories

Tech |