Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவிற்கு இது தீர்வல்ல!”.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. வெளியான புகைப்படம்..!!

கொரோனோவிற்கு எதிராக தடுப்பூசி மட்டும் தான் செயல்படும் என்றும் மாட்டுசாணங்ளை உடலில் தேய்க்காதீர்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.   

குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத்தில் வாரந்தோறும் மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் உடல் முழுக்க தேய்த்தால் கொரோனாவை எதிர்க்கும் சக்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதனை கண்டித்துள்ள மருத்துவ நிபுணர்கள், கொரோனோவை எதிர்க்கக்கூடிய சக்தி கிடைக்கும் என்று மாட்டு சாணத்தை தேய்த்தால் வேறு பல நோய்கள் ஏற்படலாம் என்கின்றனர்.

மேலும் மாட்டு சாணம் கொரோனாவிற்கு எதிராக பலனளிக்கும் என்பதை நிரூபிக்கும் எந்தவித அதிகாரப்பூர்வமான ஆதாரங்களும் இல்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்திய மருத்துவ சங்கத்தினுடைய தேசிய தலைவரான Dr. ஜே.ஏ. ஜெயலால், “இது முழுவதும் அவர்களது நம்பிக்கையே. இது போன்றவற்றை உடலில் தேய்த்துக் கொள்வதாலோ அல்லது உண்பதாலோ உடல் நலம் பாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் மட்டுமே செயல்படும். இதுபோன்று இனிமேல் செய்யாதீர்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Categories

Tech |