கோடை மழையினால் நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீரில் சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த கோடை மழையினால் வயல்களில் விளைந்து நிற்கும் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மீண்டும் முளைக்க தொடங்கி உள்ளது.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அவ்வாறு முளைக்கத் தொடங்கும் நெற்பயிர்களை பிடுங்கி சோகத்துடன் நிற்கும் விவசாயிகளை நாம்மால் படத்தில் காண முடிகிறது. இதற்காக உரிய இழப்பீடு தர வேண்டும் என அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.