Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவரு டெஸ்ட் போட்டில இடம்பெறாததுக்கு”…. ‘காரணம் இதுதான்-கைவிட்ட பிசிசிஐ’….! இவரின் டெஸ்ட் போட்டியின் எதிர்காலம் …?

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரரான புவனேஷ்வர்  குமார் , இடம்பெறாதது ,ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக  பிசிசிஐ அறிவித்தது. இந்த  போட்டிகளில் விளையாட உள்ள  இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது.ஆனால் இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், இந்திய அணியில் சிறந்த பவுலராக விளங்கும்  புவனேஷ்வர் குமார் இடம்பெறவில்லை. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் புவனேஷ்வர்  குமாருக்கு, வாய்ப்பு வழங்காமல் இளம் வீரர்களுக்கு டெஸ்ட் போட்டியில், வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது . இதற்கு முக்கிய காரணமாக புவனேஸ்வர் குமார், நீண்டகாலமாக டெஸ்ட் தொடரில் இடம்பெறாததே , அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது, என்று தெரியவந்துள்ளது.

இவர் கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். அதன் பிறகு இவர் ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்துள்ளார். அதோடு  புவனேஷ்வர் குமாரின்  உடல் பிட்னஸ், டெஸ்ட் போட்டிகளுக்கு சரிப்பட்டு வராது என்றும், இது ஒரு  நீண்டகால  தொடர் என்பதால், அவரால் தாக்குப் பிடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புவனேஷ்வர் குமார் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் .குறிப்பாக ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்து 4 முறை சாதனை படைத்துள்ளார். இதனால் இனிவரும் டெஸ்ட் போட்டிகளில், புவனேஷ்வர்  குமாருக்கு  பெரிதாக வாய்ப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கான ஐசிசி -யின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |