சாய்ந்து விழபோகும் மின்கம்பத்தை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பத்தை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கிடாரிப்பட்டி மேல தோப்பு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு வீடுகள் நெருக்கமாக இருக்கும் இடத்தில் மின் கம்பம் ஒன்று உடைந்து எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இதுகுறித்து அழகர் கோவிலில் உள்ள மின்வாரிய உயர் அதிகாரியிடம் புகார் மனு அளித்தும் புதிய மின் கம்பம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் புதிய மின் கம்பம் அமைக்க கோரியும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.