தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்கு அனைவராலும் போற்றத்தக்கது.
நாம் அனைவரும் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் இன்று உலக நாடுகள் முழுவதிலும் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்களிப்பை நினைவுகூர இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து பலரும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கமலஹாசன், “இரவு பகல் பாராது, மனம் கோணாது பெருந்தொற்றுக் காலத்தில் சேவை செய்து வரும் செவிலியர்கள் மகத்தானவர்கள். அவர்களின் தன்னலமில்லா சேவைக்கு தலை வணங்குவோம்” என டுவிட் செய்துள்ளார்.