இரண்டு வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களிடம் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனையை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தடுப்பூசியும் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது.
தற்போது பயோடெக் நிறுவனம் இரண்டு வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களிடம் கோவாகசின் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை அனுமதி கேட்டு இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பம் செய்திருந்தது. இதற்கு மத்திய அரசும் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி கிடைத்ததால் பாரத் பயோடெக் நிறுவனம் பரிசோதனையை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. மேலும் இந்த பரிசோதனை டெல்லி மற்றும் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.