பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாகவும், மீண்டும் உள்ளூர் பொது முடக்கம் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் சுற்றுச்சூழல் செயலாளரான George Eustice, கொரோனா திடீரென்று அதிகரிப்பதற்கு காரணம் தெரியவில்லை என்று கூறியுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளை பின்பற்றாத மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அதுதான் தொற்று அதிகரிக்க காரணம் என்று உறுதியாக கூற முடியாது.
எனினும் நாட்டின் நிலையை தீவிரமாக கவனித்து வருகிறோம். கடைசி பொது முடக்கமாக இது அமைய வேண்டும். மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதை தவிர்க்க நினைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.