சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் அவனியாபுரம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் தப்பியோட முயன்றுள்ளது.
இதில் 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பிரேம்குமார், கார்த்திக் ராஜா, திருமுருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.