சேலம் மாவட்டத்தில் தாய் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செல்வமேரி என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு கிறிஸ்டோபர் மற்றும் சகாயராஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வமேரியிடம் அவரது மகன்கள் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து செல்வமேரி வீட்டிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து விசாரணையின் போது செல்வமேரி அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்தக் கொலைக்கு காரணம் யார் என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால் அவருடைய மகன் சகாயராஜ்யை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.