Categories
சினிமா தமிழ் சினிமா

‘கோ’ படத்தில் நடிகர் சிம்பு… வெளியான முக்கிய காட்சியின் புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2011 -ஆம் ஆண்டு வெளியான ‘கோ’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பியா பஜ்பை, கோட்டா சீனிவாசராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சிம்பு

சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இயக்குநர் கே.வி.ஆனந்த் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட நடிகர் சிம்பு கோ படத்தின் வாய்ப்பை மிஸ் செய்தது குறித்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் ‘கோ’ படத்தில் முதலில் சிம்பு நடித்த காட்சியின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |