இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி.சிங் தந்தை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால், மக்கள் உயிரிழந்து வருகின்றன. தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆர். பி.சிங் அவரின் தந்தை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
முன்னாள் வீரரான ஆர். பி .சிங் , தோனியின் நெருங்கிய நண்பர் ஆவார். அதோடு கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். கொரோனா தொற்றால் தந்தை உயிரிழந்ததை பற்றி ,தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ள அவர், ‘என்னுடைய தந்தை ஷிவ் பிரசாத் சிங் கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார், என்று பதிவிட்டுள்ளார். இவரின் தந்தை மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
It is with deepest grief and sadness we inform the passing away of my father, Mr Shiv Prasad Singh. He left for his heavenly abode on 12th May after suffering from Covid. We request you to keep my beloved father in your thoughts and prayers. RIP Papa. ॐ नमः शिवाय 🙏🙏
— R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) May 12, 2021