Categories
மாநில செய்திகள்

வங்கி கடனுக்கான EMI வட்டி வசூலிக்கக்கூடாது – முதல்வர் பிரதமருக்கு கடிதம்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் 10ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிலவற்றிற்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சிறு, குறு நடுத்தர தொலைநிறுவனங்களின் வங்கி கடனுக்கான EMI வட்டியை செலுத்த 6 மாதகாலம் அவகாசம் கொடுக்கவும், இந்த 6 மாத காலத்தில் EMI வசூல் செய்யக்கூடாது எனவும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Categories

Tech |