Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காசு கொடுங்க…. நுங்கு வியாபாரிக்கு கிடைத்த அரிவாள் வெட்டு…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

நுங்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் வீரபத்திரன்-பூமா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சங்கிலிமுருகன் என்ற மகன் உள்ளான். இவர்கள் 3 பேரும் ஆண்டிபட்டி பஸ் நிலையத்தில் வைத்து நுங்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நுங்கு விற்பனை செய்து கொண்டிருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த வேலன் என்பவர் வீரபத்திரனிடம் நுங்கு கேட்டுள்ளார். அதன்படி வீரபத்திரனும் அவருக்கு நுங்கு கொடுத்துள்ளார்.

அதன்பின் வீரபத்திரன் வேலனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு வேலன் பணம் தரமுடியாது எனக்கு கூறி வீரபத்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த வீரபத்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |