கம்பெனியின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப் போன்ற பல்வேறு பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் சுந்தர் பகுதியில் சதீஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது கம்பெனியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வழக்கம்போல் கம்பெனியை திறப்பதற்காக வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது மடிக் கணினி, செல்போன் போன்ற பல பொருட்கள் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.