Categories
தேசிய செய்திகள்

இறைவா!! போதும் உன் சீற்றம்!! எங்களை வாழ விடு….. சரத்குமார் அறிக்கை…..!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களின் கதறல் நாளுக்கு நாள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதிகளைக் கொடுத்து உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.

அதுமட்டுமன்றி முக்கிய பிரபலங்கள் அனைவரும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில் அலைப்பேசி ஒழித்தால் ஓர் அச்சம். அண்ணா பிராண வாயு கிடைக்குமா?, பிராண வாயு வசதி உள்ள படுக்கை கிடைக்குமா? மருத்துவமனையில் இடம் கிடைக்குமா? என்று கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் வெடித்து சிதறுகிறது. அரசு நிச்சயமாக உங்கள் துன்பங்களை அறிவார்கள் நல்லது நடக்கும். இறைவா! போதும் உன் சீற்றம்! எங்களை வாழவிடு! என்று சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |