Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 8 வாரங்கள் முழு ஊரடங்கு?….. ஐசிஎம்ஆர் புதிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களின் கதறல் நாளுக்கு நாள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதிகளைக் கொடுத்து உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்திற்கும் கீழ் உள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு தேவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும். பாதிப்பு சதவிகிதம் பத்தில் இருந்து 5 ஆக குறைந்தால் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |