தேனியில் தந்தை உயிரிழந்த சோகத்தை தாங்காத மகனும் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் கடந்த சில மாதமாகவே வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் காளிதாஸ் திடீரென்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த தகவல்கள் அவருடைய மகனான முருகேசன் என்பவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரும் சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். அதன்பின் உயிரிழந்த மகன் மற்றும் தந்தையின் உடல்களை அப்பகுதியிலிருக்கும் சுடுகாட்டில் உறவினர்கள் அடக்கம் செய்தனர். இதனிடையே தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.