தேனியில் நூதன முறையில் கஞ்சாவை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக 58 வயதாகின்ற பெண் கையில் வாளியுடன் அப்பகுதியில் சுற்றித் தெரிந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து அப்பெண்ணை விசாரணை செய்து, வாளியை சோதனை செய்ததில் சிறு, சிறு பொட்டலமாக கஞ்சாவை பிரித்து வைத்து அவர் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
மேலும் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அப்பெண் அரசமர தெருவில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவருடைய மனைவியான பஞ்சவர்ணம் என்பதை கண்டுபிடித்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் பஞ்சவர்ணம் வைத்திருந்த 21/2 கிலோ அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.