Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்… கவனக்குறைவால் நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பேத்கர் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு சுந்தராம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாடசாமி இறந்துவிட்டதால் மகளான சுந்தராம்மாளுடன்  மாரியம்மாள் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுந்தராம்மாள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தராம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |