Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு… மீறினால் கடும் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த மாவட்ட கலெக்டர்…!!

தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியாளர் எச்சரித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியாளர் சமீரன் என்பவர் பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான பால், காய்கறி, மளிகை போன்ற பொருட்கள் தேவையேன்றால் மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் டீ கடைகளிலும், உணவகங்களிலும் பொதுமக்கள் 5 பேருக்கு மேல் தேவையில்லாமல் கூடி இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் பொதுமக்கள் யாருக்காவது இருமல், உடல் வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது கொரோனா கட்டுப்பாட்டு மையங்களைதொடர்பு கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை கூறி மருத்துவர்களின் அறிவுரை படி செயல் பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முக்கியமாக வீட்டில் உள்ள பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அவ்வாறு வீட்டை விட்டு அத்தியாவசியத் தேவைகளுக்காக  வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை  பின்பற்றி கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறித்தி உள்ளார்.

Categories

Tech |