முன்னணி கமல்ஹாசன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரிடம் இந்தியன்2 மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளது. நடிகர் கமல் இந்தியன்2 படத்தில் நடித்து வந்தபோது படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக வும், அவர் அரசியலில் சற்று பிஸியாக இருந்த இதன் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் ஐ வைத்து புதிய படம் இயக்க தயாரானார். இதேபோல் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் கதையை கமல்ஹாசனிடம் கூறியபோது இக்கதையில் சிறிய மாற்றம் செய்யும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதை காண வேலையை முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து, தற்போது கமல் இந்தியன்2 மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.