புதுக்கோட்டை மாவட்டத்தில் முக கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வணிக நிறுவங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன் உத்தமன் நகரிலுள்ள பல்வேறு கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மற்றும் முக கவசம் அணியாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.