Categories
தேசிய செய்திகள்

ஆவணம் கேட்டதற்கு…. 5 அடி பாம்பை காட்டி… காவல்துறையினரை தெறிக்க விட்ட இளைஞன்… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் ஆவணத்தை கேட்டதற்கு 5 அடி பாம்பை காட்டி பதறவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் என்று ஏராளமான காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று மைசூர் மாளிகை அருகே காவல்துறையினர் வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்தப் பகுதியில் வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து எங்கு சென்று வருகிறீர்கள் என்று விசாரணை நடத்தி வந்தனர்.

அதற்கு அந்த நபர் அத்தியாவசிய தேவைக்காக தான் வெளியே வந்ததாக கூறியுள்ளார். உரிய ஆவணங்களை காட்டும்படி காவல்துறையினர் கூறியுள்ளனர். இதன் பின் அந்த இளைஞன் தனது வாகனத்தில் வைத்திருந்த 5 அடி பாம்பை எடுத்து காட்டினார். அதை பார்த்த காவல்துறையினர் சற்று பயந்து பின்னே சென்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.

https://twitter.com/deepab18/status/1392056436230823939

Categories

Tech |