Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக அளிக்கப்படும் சிகிச்சை…. ஒரே நாளில் 324 பேருக்கு உறுதி…. திருப்பத்தூர் மாவட்டத்தின் நிலவரம்….!!

திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரேநாளில் 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனவிற்கான சிகிச்சை பெற்று வந்த 214 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரையிலும் 2028 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |