Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொங்கல் வைக்கப் போறோம்…. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்…. வழக்குபதிவு செய்த காவல்துறை….!!

சாமி கும்பிடுவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி பகுதியில் பட்டைசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது தொடர்பாக ஒரே ஊரைச் சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த சம்பவம் தொடர்பாக சேதுராமன், கவிதா, பாஸ்கரன், ராமநாதன், திருவலிங்கம் ஆகிய ஐந்து பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |