சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திக்கு சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலா விளக்கமளித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை கேப்ரியலா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் டிக் டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். மேலும் இவர் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் லோகேஷ் குமார் எழுதி இயக்கியுள்ள N4 என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தவிர இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘மூப்பில்லா தமிழே தாயே’ ஆல்பம் பாடலில் கேப்ரியலா பணியாற்றியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை கேப்ரியலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் யூடியூப் சேனல் ஒன்றில் கேப்ரியலா ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருவதாக வதந்தியை பரப்பியுள்ளனர் . இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்து கடுப்பான கேப்ரியலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நான் நல்லா தான் இருக்கேன்… டைட்டில பாரு உயிருக்கு போராடுராங்களாம்… ஐம் குட் உடம்பு சரி ஆகிட்டு இருக்கு’ என பதிவிட்டுள்ளார்.