கர்நாடக மாநிலத்தில் தொழிற்படிப்பிற்கான நுழைவு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தொழிற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை மாதம் நடத்தப் போவதாக அம்மாநில தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவிவருவதால் கல்லூரி நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.யூ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜூலை மாதம் 7ஆம் தேதி நடைபெற இருந்த நுழைவு தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும் என அம்மாநில தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் 28ஆம் தேதி ஒரு உயிரியல் மற்றும் கணிதத்திற்கான தேர்வுகளும், 29ஆம் தேதி இயற்பியல் வேதியலுக்கான தேர்வுகளும், 30ஆம் தேதி கன்னட தேர்வுகளும் நடைபெறும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் நுழைவுத் தேர்வு எழுத தகுதி உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் தகவல்கள் வெளியாகியுள்ளது.